தமிழ் சினிமா

தனியாக வருவாரா, அணியாக வருவாரா என்கிறார்கள்! - ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் சஸ்பென்ஸ்

செய்திப்பிரிவு

விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ படம் ஜன. 9-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது. தமிழக வெற்​றிக்​ கழகம் என்ற அரசி​யல் கட்​சியை விஜய் ஆரம்​பித்​திருப்​ப​தால் ‘ஜன​நாயகன்’ அவருடைய கடைசி திரைப்​பட​மாகும். அதிக எதிர்​பார்ப்பு உள்ள இப்​படத்​தின் பாடல் வெளி​யீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் உள்ள புக்கிட் ஜலில் நேஷனல் ஸ்டேடி​யத்​தில் நடை​பெற்​றது.

இதில் சுமார் 80 முதல் 90 ஆயிரம் ரசிகர்​கள் குவிந்​ததை அடுத்து மலேசி​யா​வில் அதி​கம் பேர் பங்​கேற்ற தமிழ்த் திரைப்பட இசை நிகழ்ச்சி இது என்று மலேசிய புக் ஆஃப் ரெக்​கார்​ட்ஸில் இடம்பெற்று சாதனை படைத்​தது.

இந்​நிகழ்ச்​சி​யில் விஜய் பேசும்​போது கூறிய​தாவது: இலங்​கைக்கு அடுத்​த​படி​யாக, மலேசி​யா​வில் தான் அதி​கள​வில் தமிழர்​கள் இருக்​கிறார்​கள். அதனால் தான் அதி​கள​வில் தமிழ் படங்​கள் இங்கே ஷூட் செய்​யப்​படு​கின்​றன.

நண்​பர் அஜித்​தின் பில்லா பட ஷுட்​டிங் இங்கு தான் நடந்தது. எனது காவலன், குருவி படங்​களின் ஷூட்​டிங்​கை​யும் இங்கு நடத்​தினோம். நான் திரைத்​துறை​யில் நுழைந்த போது சிறிய மணல் வீடு கட்ட தான் ஆசைப்​பட்​டேன். ஆனால், நீங்​கள் எல்​லாரும் எனக்கு அரண்​மனையே தந்​திருக்​கிறீர்​கள். 33 வருடம் தொடர்ந்து ஆதரவு தரு​வது சாதாரண விஷ​யம் இல்ல.

ஆனால் ரசிகர்​கள் அதை எனக்கு தந்​திருக்​கிறார்​கள். அதற்கு வெறும் நன்றி மட்​டும் சொல்​லாமல் நன்றி கடன் செலுத்​தும் வித​மாக அவர்​களுக்​காக நிற்​கிறேன். எனக்​காக எல்​லா​வற்​றை​யும் விட்​டுக்​கொடுத்த அவர்​களுக்​காக நான் சினி​மாவையே விட்​டுக்​கொடுக்​கிறேன். வாழ்க்​கை​யில் வெற்றி பெற நண்​பர்​கள் இருக்​கிறார்​களோ இல்​லை​யோ, வலு​வான எதிரி​கள் அவசி​யம்.

சும்மா வரு​கிற போகிறவர்​களை எதிர்த்து நிற்க முடி​யாது. வலு​வானவர்​களை எதிர்த்​தால் தானே, நாம் ஜெயிக்​கிற அளவுக்கு வலிமை​யாக இருக்​கிறோம் என்று அர்த்​தம். இப்​போது நம்​மைப் பற்றி ஒரு பேச்சு ஓடிக் கொண்​டிருக்​கிறது. விஜய் தனி​யாக வரு​வா​ரா, அணி​யாக வரு​வாரா என்று கேட்​கிறார்​கள். நாம் எப்​போது தனி​யாக இருந்​திருக்​கிறோம்.

33 வருட​மாக மக்​களான உங்​களு​டன் மிகப்​பெரிய அணி​யாகத்​தானே இருக்​கிறேன். 'என்னடா இப்போ கூட சஸ்பென்ஸ் வைக்கிறாரே?' என்றுதான் தோன்றும். சஸ்பென்ஸ் இருந்தால் தானே கிக் இருக்கும். இவ்வாறு விஜய் பேசினார்.

SCROLL FOR NEXT