நஷ்டம் இல்லாத தொழிலில் லட்சங்களில் வருமானம் | சம்பளம் பத்தலையா? - 13

நஷ்டம் இல்லாத தொழிலில் லட்சங்களில் வருமானம் | சம்பளம் பத்தலையா? - 13
Updated on
2 min read

கரோ​னா தொற்று கொடியது. சில மாதங்​களுக்கு  கோரத்​தாண்​ட​வம் ஆடியது. பல லட்​சம் மக்​களைக் கொன்று குவித்​தது. ஆனால்,  கரோனா வேறு சில​வற்​றை​யும் செய்​தது. அவற்​றில் ஒன்​று, இணை​யத்தை எவ்​வாறு கூடு​தலாகப் பயன்​படுத்​தலாம் என்​பதை மக்​களுக்​குச் சொல்​லிக் கொடுத்​தது.

அதற்கு முன்​னரும் கூட, ஜூம், யுடியூப் போன்​றவற்றை பலரும் பயன்​படுத்​திக் கொண்​டிருந்​தா​லும்,  ஊரடங்கு காரண​மாக வீட்​டுக்​குள் முடங்​கிய மக்​களின் பார்வை தொலைக்​காட்​சி, கம்ப்​யூட்​டர், ஸ்மார்ட் போன்​கள் பக்​கம் திரும்​பியது . வேலைக்கு போய்க் கொண்​டிருந்த ஆண்​கள், பெண்​கள் மட்​டுமல்ல. சில சிறார்​கள்​கூட சொந்​த​மாக யுடியூப் சேனல்​களை ஆரம்​பித்​தார்​கள்.  அவர்​களுக்​குத்  தெரிந்​தவற்​றையெல்​லாம் அதில் பகிர்ந்​தார்​கள். 

செல​வில்​லாமல் செய்​யக்​கூடியது என்​று​தான் ஆரம்​பித்​தார்​கள். அதன் மூலம் வருமானம், அதி​லும் இவ்​வளவெல்​லாம் வரும் என்று பெரும்​பாலானவர்​கள் நினைக்​க​வில்​லை.  சென்ற அத்​தி​யா​யத்​தில் பார்த்​தது போல, மாதம் சில ஆயிரங்​கள் முதல் சில, பல லட்​சங்​கள் வரை சம்​பா​திக்​கும் தனி நபர்​கள் இருக்​கிறார்​கள்.

Village Cooking Channel (கி​ராமத்து சமையல்) என்​கிற  தமிழ்​நாட்டு யுடியூப் சேனல், எளிய மனிதர்​கள் அடைந்த மிகப்​பெரிய வெற்​றிக்கு சான்​று. அந்த சேனலுக்கு இருக்​கிற சப்​ஸ்​கிரைபர்​கள்  எண்​ணிக்கை 30 லட்​சம். `அவர்​களது தோசை போடு​வது எப்​படி?’ வீடியோவை 20 லட்​சம் பேர் பார்த்​திருக்​கிறார்​கள். `சாக்​லேட் மில்க் ஷேக் போடு​வது எப்​படி?’ என்ற வீடியோவுக்​கு, ஒரு கோடியே 70 லட்​சம் பார்​வை​கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in