தமிழ் சினிமா

‘கருப்​பு’ படத்​துக்கு எதிர்பார்க்காத வெற்றி: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

நிலா

சூர்​யா, த்ரிஷா நடித்து வெளி​யான திரைப்​படம், ‘கருப்​பு’. ஆர்.ஜே பாலாஜி இயக்​கி​யுள்ள இப்​படத்தை ட்ரீம் வாரியர் பிக்​சர்ஸ் சார்பில் எஸ்​.ஆர்​.பிர​காஷ் பாபு, எஸ்​.ஆர்​.பிரபு தயாரித்​துள்ளனர்.

இப்​படம் உலகம் முழு​வதும் இது​வரை ரூ.200 கோடிக்​கும் அதிகமாக வசூலித்​துள்​ளது. இப்​படம் வெற்​றிகர​மாக ஓடிக் கொண்​டிருப்பதை அடுத்து, செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​தார் நடிகர் சூர்யா.

அப்​போது அவர் கூறிய​தாவது: ‘கருப்​பு’ படத்தை அரை மணி நேரத்தில் முடிவு பண்​ணினேன், இதில் நடிக்கலாம் என்​று. வேறு எந்​தப் படத்​தை​யும் இவ்​வளவு விரை​வாக முடிவு பண்ணியதில்லை. ஆர்ஜே பாலாஜி கதை சொல்​லும்​போது, தியேட்​டரில் வேறு மாதிரி இருக்​கும் என்ற நம்​பிக்கை இருந்​தது. அனைத்து படங்​களை​யும் நம்​பிக்கை வைத்​து ​தான் பண்ணுகிறோம்.

ஆனால், இந்​தப் படத்​தின் முதல் நாளி​லிருந்தே எல்​லாமே சரியாகப் போனது. அதற்கு உறு​துணை​யாக இருந்​தது, ட்ரீம் வாரியர்ஸ் பிர​காஷ், பிரபு​தான். எல்லா முடிவு​களைச் சரி​யாக எடுத்​ததற்​கும் எடுக்க வைத்த கருப்​ப​சாமிக்​கும் நன்றி சொல்ல வேண்​டும். இது ஆசைப்​பட்ட வெற்​றி. ஆனால், எதிர்​பார்க்​காத பெரிய வெற்றியைக் கொடுத்த ரசிகர்​களுக்கு நன்​றி.

இது மாதிரி​யான ரியாக் ஷனை தியேட்​டரில் சமீபத்​தில் பார்த்ததே இல்​லை. பெரிய அன்பு கிடைத்​திருக்கிறது. கடவுளின் அருள் இந்​தப் படத்​தில் இருக்​கிறது என்​பதை உணர்​கிறோம். இப்படம் வெளி​யான அனைத்து இடங்​களி​லும் அதாவது தமிழ்​நாடு மட்டுமின்​றி, ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, துபாய் என எங்கும் இதே ரியாக் ஷன் கிடைக்​கிறது என்​பதை நினைக்​கும்​போது இந்​தத் தொழில் பண்​ணுவது பிடித்​திருக்​கிறது என்று மறுபடி​யும் சொல்​லத் தோன்​றுகிறது.

எல்லா படத்​துக்​கும் விமர்​சனம் இருக்​கும், இதை இப்​படிப் பண்ணியிருக்​கலாம், அப்​படி பண்​ணி​யிருக்​கலாம் என்​று. ஆனால் எல்​லோரிடம் இருந்​தும் ஒரே மாதிரி​யான அன்​பை​யும் அவர்​களுக்கு சந்​தோஷத்​தை​யும் ஒரு படம் கொடுக்​கிறது என்றால் அதற்காக நான் நன்றி சொல்ல வேண்​டும்.

என்​னுடன் 28 வருட​மாக உதவி​யாள​ராக இருக்​கும் குமார் சொன்ன ஒரு விஷ​யம், படத்தைத் தாண்டி கருப்​ப​சாமிக்கு ஒரு பாடல் வைக்க வேண்​டும் என்​பது. படத்​துக்கு தொடர்பே இல்​லாத குமாரின் ஐடி​யா​தான் அந்த கிளை​மாக்ஸ் பாடல். எடிட் செய்து முடித்த பிறகு 5 மாதத்​துக்​குப் பிறகு எடுத்​தது​தான், அப்​பாடல். படத்​துக்கு இனி செலவு பண்ண வேண்​டாம், இனி முடி​யாது என்று நினைத்து அந்த ஐடி​யாவை முடித்​திருக்கலாம்.

ஆனால், எடுத்​து​விடலாம் என முடிவு செய்து அப்​பாடலை ஷூட் செய்​தோம். அதைத்​தான் இப்​போது ரசிகர்​கள் பாராட்டுகிறார்கள். குழந்​தைகளில் இருந்து பெரிய​வர்​கள் வரை தியேட்​டர்களில் அத்​தனை பேரும் படத்தை ரசிக்​கிறார்​கள். இவ்வாறு நடிகர் சூர்யா கூறி​னார். தயாரிப்​பாளர்​கள் எஸ்.ஆர்.பிரபு, பிர​காஷ் ​பாபு, 2 டி என்​டர்​டெ​யின் மென்ட் நிறுவனத்​தின் ராஜ சேகர ​பாண்​டியன் உள்​ளிட்​டோர் உடனிருந்தனர்​.

SCROLL FOR NEXT