தமிழ் சினிமா

சர்​வ​தேச துப்​பாக்​கிச் சுடும் வீரராக நடிக்கும் சூர்யா

ப்ரியா

தனுஷ் நடித்த ‘வாத்​தி’, துல்​கர் சல்​மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படங்​களை இயக்​கிய தெலுங்கு இயக்​குநர் வெங்கி அட்​லூரி இயக்​கத்​தில் சூர்யா நடித்​துள்ள படம், ‘விஸ்​வ​நாத் அண்ட் சன்​ஸ்’. இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்​கு​மார், ரவீனா டாண்​டன் உள்​ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.​வி.பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்ள இப்​படத்​துக்கு நிமிஷ் ரவி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். சித்​தாரா என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் மற்​றும் ஃபார்ச்​சூன் ஃபோர் சினி​மாஸ் சார்​பில் தயாரிக்​கப்​பட்டு கரா ஸ்டுடியோஸ் வழங்​கும் இந்​தப் படம் ஜூலை மாதம் வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில், இதன் டீஸர் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

          

அதில், 40 வயதி​லும் தனது கனவு​களைத் துரத்​தும் சர்​வ​தேசத் துப்​பாக்​கிச் சுடும் வீர​ராக, சூர்யா நடித்​துள்​ளார். அவரை காதலிக்​கும் 20 வயது பெண்​ணாக மமிதா பைஜு நடித்​துள்​ளார். இரு​வருக்​கு​மான வயது வித்​தி​யாசம் கொண்ட வழக்​கத்​துக்கு மாறான காதல் கதை இதன் டீஸரில் தெரி​கிறது. “பல லேயர்​கள் உள்ள வேடத்​தில் சூர்யா நடித்​துள்​ளார்.

அவருடைய ஸ்டைலான தோற்​றம், கதைக்​குப் புத்​துணர்ச்​சியை அதி​கரிக்​கும். மமிதா பைஜு​வின் நடிப்​பு, வெங்கி அட்​லூரி​யின் வசனங்​கள் என இப்​படம் எமோஷனல் டிரா​மா​வாக ரசிகர்​களை ஈர்க்​கும்” என்​கிறது படக்​குழு.

SCROLL FOR NEXT