நடிகர் சூரி

 
தமிழ் சினிமா

வைரலானது சூரி​யின் ‘மண்​டாடி’ பட புரமோ பாடல்!

செய்திப்பிரிவு

சூரி நாயக​னாக நடித்​துள்ள ‘மண்​டாடி’ படத்தை மதி​மாறன் புகழேந்தி இயக்​கி​யுள்​ளார். இதில், சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், மிதுன், பாலசர​வணன் உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர்.

ஆர்​.எஸ்​.இன்ஃ​போடெ​யின்மென்ட் சார்​பில் எல்​ரெட் குமார் தயாரித்​துள்ள இந்​தப் படத்​துக்கு ஜி.​வி.பிர​காஷ் குமார் இசையமைத்​துள்​ளார். எஸ்​.ஆர்​.க​திர் ஒளிப்பதிவு செய்​துள்​ளார். கடலின் பிர​மாண்​ட​மான பின்​னணி​யில், பரபரப்​பான படகுப் பந்தய உலகத்தை மைய​மாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள இப்படம், செப். 10-ல் வெளி​யாகிறது.

இதற்​கிடையே இப்​படத்​துக்​காக வெளி​யிடப்​பட்ட புரமோ பாடல் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. ஜி.​வி.பிர​காஷ் குமார் இசை​யில், வேல்​முரு​கன், வாகீசன் ஆகியோரின் குரலில் உரு​வாகி​யுள்ள இப்பாடல், கதை​யின் கரடு​முர​டான களத்​தை​யும், ஆக் ஷன் உத்வேகத்​தை​யும் பிர​திபலிக்​கிறது.

இப்​பாடலின் தமிழ் யூடியூப் பதிப்பு 10 மில்​லியனுக்​கும் அதி​க​மான பார்​வை​களைக் கடந்து சாதனை படைத்​துள்​ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் ஒரே நேரத்​தில் வெளியான இப்பாடல், அனைத்து மொழிகளி​லும் வரவேற்​பைப் பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT