தமிழில் ஏழாவது மனிதன், மண்வாசனை, சத்யா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, 18 வயசு உள்பட பல படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருப்பவர் சத்யேந்திரா (65). பெங்களூரைச் சேர்ந்த இவர், தொடக்கக் காலத்தில் பிரபல இயக்குநர் கிரிஷ் கர்னாட் இயக்கிய நாடகங்களில் நடித்துள்ளார்.
பின்னர் சென்னை வந்த அவர், தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தினார். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவால் நேற்று முன் தினம் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. சத்யேந்திரா மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.