தமிழ் சினிமா

பேயை பார்த்து பயப்படுவதை விட'ஏஐ'-யை பார்த்து பயப்படுவது அதிகமாகிவிட்டது: நடிகர் சந்தானம் பேச்சு

செய்திப்பிரிவு

சென்னை: பேயை பார்த்து பயப்​படு​வதை விட ‘ஏஐ’-யை பார்த்து பயப்​படு​வது அதி​க​மாகி​விட்​டது என நடிகர் சந்​தானம் கலகலப்​பாகப் பேசி​னார். சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு காவல்​துறை சார்​பில், இணை​ய​வழி (சைபர்) குற்​றத் தடுப்பு விழிப்​புணர்வு பேரணி மெரினா கடற்​கரை, உழைப்​பாளர் சிலை​யி​லிருந்து கண்​ணகி சிலை வரை நேற்று நடை​பெற்​றது.

இதில் நடிகர் சந்​தானம் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்து கொண்டு பேரணி​யைத் தொடங்கி வைத்​தார். நிகழ்ச்​சி​யில் நடிகர் சந்​தானம் பேசிய​தாவது: முன்​பெல்​லாம் வீட்​டுக்​குள் புகுந்து திருடு​வாங்க. இப்​போது வீடியோ கால் மூல​மாகவே திருட ஆரம்​பிச்​சிட்​டாங்க.

          

இந்த எல்லா குற்​றங்​களும் நம்ம கையில் இருக்​கும் இந்த போன் மூலம்​தான் ஆரம்​பிக்​கிறது. இன்​ஸ்​டாகி​ராம், வாட்​ஸ்​-அப், ஃபேஸ்​புக் என்று நிறைய செயலிகளை பயன்​படுத்​துகிறோம். போனை வைத்​துக் கொண்டு நாம் சும்மா இருப்​ப​தில்​லை. வாழைக்​காய் பஜ்ஜி போடுற மாதிரி எப்ப பாத்​தா​லும் போனை தடவிக்​கொண்டே இருக்​கிறோம்.

இதை தெரிந்​து ​கொண்​டு​தான் சைபர் குற்​ற​வாளி​கள் நம்மை ஏமாற்​றுகிறார்​கள். இப்​போது பேயைப் பார்த்து பயப்​படு​வதை விட, ஏஐ-யை பார்த்து பயப்​படு​வது அதி​க​மாகி​விட்​டது. எனவே, சைபர் மோசடிகள் தொடர்​பாக பொது​மக்​கள் மிக​வும் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும்.

அதை​யும் மீறி சைபர் மோசடி நடை​பெற்​றால் 1930 என்ற இணைய குற்ற உதவி மைய எண்​ணைத் தொடர்​பு​கொண்டு உடனடி​யாக தகவல் அளிப்​பது மிக​வும் அவசி​யம். மேலும், சைபர் மோசடி புகார்​களை www.cybercrime.gov.in என்ற இணை​யதளத்​தின் வாயி​லாக​வும் பதிவு செய்​ய​லாம். அனை​வரும் விழிப்​புணர்​வுடன் இருந்​தால் மட்​டுமே சைபர் குற்​றங்​களை முற்​றி​லு​மாக தடுக்க முடி​யும் என்​றார்.

துணை ஆணை​யர் ஸ்ரீநாதா பேசுகை​யில், “2025 ஜன. 1 முதல் 2026 பிப்​.28 வரை 3,692 இணை​ய​வழி குற்​றம் சார்ந்த புகார்​கள் பெறப்​பட்​டு, 208 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டு, குற்​ற​வாளி​கள் 164 பேர் கைது செய்​யப்​பட்​டனர்” என்​றார். ​

பேரணி​யில் கலந்து கொண்ட மாணவ, மாணவி​கள் இணை​யதள குற்​றங்​கள், ஆன்​லைன் வர்த்தக மோசடி, டிஜிட்​டல் கைது மோசடி, இணை​ய​வழி​யில் மிரட்டி பணம் பறிப்பு மோசடி மற்​றும் சமூக வலை​தளங்​களை பொறுப்​புடன் கையாள்​வது குறித்து பொது​மக்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வித​மாக, விழிப்​புணர்வு வாசகங்​கள் அடங்​கிய பதாகைகளை கையில் ஏந்​தி சென்​றனர்.

இந்​நிகழ்ச்​சி​யில், சென்னை போக்​கு​வரத்து காவல் கூடு​தல் ஆணை​யர் கார்த்​தி​கேயன் (பொறுப்பு - மத்​திய குற்​றப்​பிரிவு), துணை ஆணை​யர் கீதாஞ்​சலி உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT