நடிகர் சந்தானம் நடிக்கும் அவருடைய 20 வது படத்தை சுதாமன் கிருஷ்ணா இயக்குகிறார். இதில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டிஎஸ்ஆர் மற்றும் பவுஸி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் கே.ஜே.கணேஷ், கே 7 ஸ்டூடியோஸ் விஜய் கே செல்லையா இணைந்து தயாரிக்கின்றனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார்.
துப்பு துலக்கும் நிபுணரை மையப்படுத்திய இக்கதையில் ஹீரோ ஒரு குற்றத்தைக் கண்டறிய தொடங்குகிறார். இது அவரை எதிர்பாராத வகையில் சாகசமும், சிலிர்ப்பூட்டும் பயணத்திலும் ஆழ்த்துவது கதை. இந்தப் படம் மர்மம், சஸ்பென்ஸ், நகைச்சுவை ஆகியவற்றின் கலவையைக் கொண்ட புதிய கால பயணத்தின் அடிப்படையிலான கதை. இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.