தமிழ் சினிமா

நாலு பேர் சந்​தோஷமா சிரிக்கிறாங்கன்னா..! - ‘மூன்வாக்’ டிரெய்லர் வெளியீடு

நிலா

பிரபுதேவா கதாநாயக​னாக நடித்​துள்ள, ‘மூன்​வாக்’ திரைப்படத்தில் யோகி பாபு, அஜு வர்​கீஸ், அர்​ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி உள்​பட பலர் நடித்​துள்​ளனர். யோகி பாபு 16 வெவ்​வேறு கதாபாத்திரங்​களில் நடித்​திருக்​கிறார். மனோஜ் நிர்​மலா ஸ்ரீதரன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு ஏ.ஆர்.ரஹ்​மான் இசை அமைத்துள்ளார். சிறப்​புத் தோற்​றத்​திலும் அவர் நடித்​துள்​ளார்.

நகைச்​சுவை, இசை, நடனம் மற்​றும் காதல் என அனைத்து அம்​சங்​களும் நிறைந்த பொழுதுபோக்​குத் திரைப்​பட​மாக உருவாகியுள்ள இதை, பிஹைண்ட்​வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்​துள்​ளது. டிச.24-ல் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இப்​படம் வெளியாகிறது.

ரோமியோ பிக்​சர்ஸ் ராகுல் வெளி​யிடு​கிறார். இதன் அதிகாரப்பூர்வ​மான டிரெய்லர் வெளியாகி​யுள்​ளது. டிரெய்லரின் இறுதி​யில் ஏ.ஆர்.ரஹ்​மான் பேசும், “நாலு பேர் சந்​தோஷமா சிரிக்கிறாங்​கன்னா, எது​வும் தப்​பில்லை” என்ற வசனம் ரசிகர்களின் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT