தமிழ் சினிமா

‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தது பெரிய தவறு: கெளதம் ராம் கார்த்திக்

ஸ்டார்க்கர்

‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தது பெரிய தவறு என்று கெளதம் ராம் கார்த்திக் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்’. இப்படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ‘முத்துராமலிங்கம்’ படம் குறித்து கெளதம் ராம் கார்த்திக் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால், அப்படத்தினை இணையவாசிகள் மத்தியில் பயங்கரமாக கலாய்ப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

‘முத்துராமலிங்கம்’ படம் குறித்து கெளதம் ராம் கார்த்திக், “’முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்ததிற்காக வருத்தப்படுகிறேன். அதை எனது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய தவறாக பார்க்கிறேன். அந்தச் சமயத்தில் புரிதல் இல்லாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அது என் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது.

அப்படத்துக்குப் பிறகு அது மாதிரியான படங்களை முழுமையாக தவிர்த்துவிட்டேன். ஒரு கட்டத்தில் மீண்டும் முயற்சிக்கலாம் என்று முத்தையா இயக்கத்தில் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தேன். இப்போது கூட முழுமையான மாஸ் படங்களில் நடிக்க பயம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் கெளதம் ராம் கார்த்திக்

SCROLL FOR NEXT