தமிழ் சினிமா

“என் வாழ்க்கையை மாற்றிய முடிவு!” - எல்லி அவ்ரம்

நிலா

ஸ்​வீடன் நாட்​டில் பிறந்து வளர்ந்​தவர் நடிகை எல்லி அவ்​ரம். இந்தியில் சில படங்களில் நடித்​துள்ள இவர், தமிழில் தனுஷ் நடித்த ‘நானே வரு​வேன்’ படத்​தில் நடித்​துள்​ளார். பாலிவுட்​டில் நடிகை​யாக வேண்​டும் என்ற கனவுடன் இளம் வயதிலேயே இந்தியா வந்த அவர், தனது முடிவுக்​காகப் பெரு​மைப்​படு​வ​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “நான் சந்​தித்த போராட்​டங்​கள் அனைத்​தும் உண்மை யிலேயே மதிப்​புமிக்​கவை. இளம் வயதில் இந்​தி​யா​வுக்கு வர வேண்​டும் என்று துணிச்​சலான முடிவு எடுத்ததற்​காக பெரு​மைப்​படு​கிறேன்.

அந்த ஒரு முடிவு என் வாழ்க்​கையை மாற்​றியது. இந்​தியா எனக்கு வாழ்க்​கையை பல கோணங்​களில் பார்க்​கக் கற்​றுக் கொடுத்​தது. மனிதர்​கள், கலாச்​சா​ரம், உறவு​கள், சவால்​கள் என வாழ்க்​கை​யின் பல பரி​மாணங்களை புரிந்​து​கொண்​டேன்.

இந்​தி​யா​வில் வாழ்ந்​ததன் மூலம் நான் நிறைய கற்​றுக்​கொண்​டேன். அதற்​காக ஆசீர்​வ​திக்​கப்​பட்​ட​வளாக உணர்​கிறேன். என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்​குநர்​களுக்கு நன்​றி. அதே​போல் என்னை ஏற்​றுக்​கொண்​டு, ஆதரித்து வரும் இந்​திய ரசிகர்​களுக்​கும் நன்​றி​யுள்​ளவளாக இருக்​கிறேன் ” என்​று கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT