தமிழ் சினிமா

‘99/66’ படத்தில் கருப்பசாமி பாடல்

செய்திப்பிரிவு

எம்​.எஸ்​.மூர்த்தி எழுதி இயக்​கி, இசை அமைத்​து, மித்ரா பிக்​சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்​பில் தயாரித்​துள்ள படம் ‘99/66 தொண்​ணூற்று ஒன்​பது அறு​பத்​தி​யாறு”. இதில் சபரி, ரோகிந்த் கதா​நாயகர்​களாக நடித்​துள்​ளனர். நாயகி​களாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா நடித்​துள்​ளனர். பவன் கிருஷ்ணா, கே.ஆர்​.​விஜயா என பலர் நடித்​துள்​ளனர். சேவிலோ ராஜா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

“அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் நடை​பெறும் சில அமானுஷ்ய சம்​பவங்​கள், குடி​யிருப்பு வாசிகளை அச்​சத்​தி​லும் பீதி​யிலும் ஆழ்த்​துகின்​றன.

          

அவை ஏன் நடை​பெறுகின்​றன? அதன் பின்​னணி​யில் உள்ள மர்​மம் என்ன? என்​பதை ஹாரர் கலந்து சொல்​லும் படம் இது.

இதில் 3 வித​மான ஆன்​மீகம் சார்ந்த பாடல்​கள் இடம்​பெற்​றுள்​ளன. அதில் ‘அருவா மீசைக்​காரன்’ என்ற கருப்​ப​சாமி பாடலும், ‘யாரு பிள்​ளை​யாரு’ என்ற விநாயகர் பாடலும் இடம்​பெற்​றுள்​ளது. படத்தை மார்ச் 6-ல் வெளி​யிடுகிறோம்” என்​றார் எம்​.எஸ்​.மூர்​த்​தி.

SCROLL FOR NEXT