சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘டான்’. விஜய்யின் ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களில் இயக்குநர் அட்லீயிடம் உதவியாளராகப் பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி இயக்கியிருக்கும் படம்.
‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் உரையாடியதிலிருந்து...
ஏன் ’டான்’ என்கிற தலைப்பு?
காலேஜ்ல பார்த்தீங்கன்னா, எதையுமே கண்டுக்காம, எல்லாத்தையும் ஈசியா எடுத்துகிட்டு, யாரும் கேள்வி கேட்டா, மிரட்டலா பதில் சொல்லிகிட்டுக் கெத்தா சில பேர் இருப்பாங்க. அந்த குரூப்பைப் பார்த்தாலே தனியாத் தெரியும். அவங்க தங்களையே ஒரு டான் மாதிரி நினைச்சுக்கிட்டு இருப்பாங்க. ‘டான்’ படத்தோட நாயகனும் அப்படித்தான்.
எல்லாருக்கும் பிடிக்கிற ‘செல்ல டான்’ மாதிரியான கேரக்டர். அதனாலத்தான் இப்படித் தலைப்பு வச்சோம். தலைப்பைப் பார்த்து, ‘இது ஆக்ஷன் கதையா?’ன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. படத்துல ஆக்ஷன் இருக்கு. ஆனா, ஆக்ஷன் படமா இருக்காது. சிவகார்த்திகேயன் படங்கள்ல இருக்கிற அந்த ஜாலி, கேலி விஷயங்கள் இதுலயும் இருக்கு. அது இன்னும் கொஞ்சம் நல்லா, ரியலா அமைஞ்சிருக்குன்னு சொல்வேன்.
எஸ்.ஜே.சூர்யா வில்லனாமே?
இது ஹீரோ-வில்லன் கதைன்னு சொல்ல முடியாது. நாம எல்லாருமே சில விஷயங்கள்ல நல்லவங்களா இருப்போம், சில விஷயங்கள்ல மோசமா நடந்துப்போம். எப்பவுமே கெட்டவங்களாவும் எப்பவும் நல்லவங்களாகவும் இருக்கிறதில்லையே. ‘டான்’ல அந்த மாதிரியான கதாபாத்திரங்களைக் கொண்டதுதான். அப்படித்தான் எஸ்.ஜே.சூர்யா கேரக்டரும்.
அவர் பண்ற விஷயங்கள், அவர் பக்கம் இருந்து பார்த்தா நியாயமா தெரியும். இந்தக் கதையில சிறப்பா நடிச்சிருக்கார். படத்துக்குப் பெரிய பலம்னு சொல்லலாம்.
சிவகார்த்திகேயனுக்கு அப்பாவா சமுத்திரக்கனி நடிச்சிருக்கார். நடிகர் சூரி, ‘பெருசு’ங்கற எமோஷனலான கேரக்டர் பண்ணியிருக்கார். வழக்கமான சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியைவிட இதுல வேற மாதிரி இருக்கும். அவங்களோட அலப்பறை காமெடி இருக்காது. சூரி, இப்படியும் நடிப்பார்ங்கறதைக் காட்டும் விதமா கேரக்டர் இருக்கும்.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்