தமிழ் சினிமா

அமெரிக்காவில் பிரபல நடன நிகழ்ச்சியில் 'மரண மாஸ்' பாடலுக்கு நடனம்: வைரலாகும் வீடியோ

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் பிரபலமான நடன நிகழ்ச்சியில் 'மரண மாஸ்' பாடலுக்கு இந்தியக் குழுவினர் நடனமாடியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் மிகப் பிரபலமான நடன நிகழ்ச்சி 'America's Got Talent'. இந்த நடன நிகழ்ச்சியில் பல பிரம்மாண்டமான நடனங்கள் அரங்கேறும். அந்த வீடியோக்கள் அனைத்துமே இணையத்தில் பெரும் வைரலாவது வழக்கமான ஒன்று.

இந்த நிகழ்ச்சியில் இந்தியக் குழுவினர், 'பேட்ட' படத்தில் இடம்பெற்ற 'மரண மாஸ்' பாடலுக்கு நடனமாடியுள்ளனர். தற்போது இந்த வீடியோதான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, சிம்ரன், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், த்ரிஷா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். 'பேட்ட' படத்தில் ரஜினிக்கான ஓப்பனிங் பாடலாக 'மரண மாஸ்' அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய நடனக் கலைஞர்களின் நடனத்தை சன் பிக்சர்ஸ் மற்றும் அனிருத் இருவருமே பாராட்டியுள்ளனர்.

'மரண மாஸ்' பாடலுக்கான இந்தியக் கலைஞர்களின் நடனத்தைக் காண:

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT