இயக்குநர் சுந்தர்.சி உடன் எந்தவொரு மோதலுமே இல்லை என்று ஹிப் ஹாப் ஆதி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஹிப் ஹாப் ஆதியை இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சுந்தர்.சி. 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடித்துள்ள 'நான் சிரித்தால்' படத்தையும் தயாரித்துள்ளார் சுந்தர்.சி.
ராணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். பிப்ரவரி 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனிடையே சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'அரண்மனை 3' படத்தின் இசையமைப்பாளராக சத்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால், ஹிப் ஹாப் ஆதி மீது அதிருப்தியில் இருப்பதால் தான் சுந்தர்.சி இசையமைப்பாளரை மாற்றிவிட்டார் எனத் தகவல் வெளியானது.
சுந்தர்.சி உடன் பிரிவா என்ற கேள்விக்கு ஹிப் ஹாப் ஆதி, "சுந்தர்.சி சார் இயக்கவுள்ள 'அரண்மனை 3' படத்தில் இசையமைப்பாளரை மாற்றிவிட்டதால் எங்களுக்குள் மோதல் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு சுந்தர்.சி சார் அறிவுரை கூறியுள்ளார். எனக்கு இசையும் ரொம்பவே முக்கியம். எங்களுக்குள் எந்தவொரு மோதலுமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்