தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக்: முதல் தோற்றம் எப்படி?

செய்திப்பிரிவு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் தானே இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தை முடித்துள்ளார். அடுத்து அவர், சேகர் கமுலா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘இளையராஜா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார். கனெக்ட் மீடியா, பிகே ப்ரைம் புரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

முதல் தோற்றம் எப்படி?: இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தோற்றத்தை பொறுத்தவரை சென்னை நகருக்குள் ஹார்மோனியப்பெட்டியுடன் ஒரு இளைஞன் நின்றுகொண்டிருக்கும்படி போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையான போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT