Published : 01 Nov 2023 05:16 AM
Last Updated : 01 Nov 2023 05:16 AM

இளையராஜா ‘பயோபிக்’கில் தனுஷ்: அடுத்த வருடம் படப்பிடிப்பு

சென்னை: நடிகர் தனுஷ், ‘கேப்டன் மில்லர்’ படத்தை அடுத்து தனது 50-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷண்,காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை அடுத்து, சேகர் கம்முலா, இந்தி இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இளையராஜா பயோபிக்கில் அவர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் ஆர்.பால்கி, “தனுஷ் நடிப்பில், இளையராஜா வாழ்க்கைக் கதையைப் படமாக எடுக்க வேண்டும் என்பது என் கனவு. கடந்த மூன்று தலைமுறைகளாக இசை அமைத்து வரும் இசை அமைப்பாளர் அவர். இளையராஜாவின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக எடுத்தால் அதற்கு தனுஷ் தான் பொருத்தமானவராக இருப்பார்” என்று சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இளையராஜாவின் ‘பயோபிக்’ படத்தை மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா’வைத் தயாரிக்கும் கன்கெட் மீடியா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. யார் இயக்க இருக்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x