தமிழ் சினிமா

“வெற்றியை குறிப்பிட இத்தனை ஆண்டுகளாகிவிட்டது” - சாந்தனு பாக்யராஜ் உருக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: “வெற்றி என்ற வார்த்தையை குறிப்பிட எனக்கு இத்தனை ஆண்டுகளாகிவிட்டது” என நடிகர் சாந்தனு பாக்யராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் எதிரொலியாக நடிகர் பாக்யராஜ் உருக்கமான பதிவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மிகவும் உணர்வூப்பூர்வமாக உள்ளது. வெற்றி என்ற வார்த்தையை குறிப்பிடுவதற்கு எனக்கு 15 ஆண்டுகள் 4 மாதங்கள் என 5,600 நாட்கள் ஆகியுள்ளன. இது உங்களால் தான். உங்களின் தொடர் ஆதரவு தான் என்னை இத்தனை ஆண்டுகளாக துவளவிடாமல் ஓடவைத்துள்ளது. இதற்காக நான் நன்றிகடன் பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT