மலையாள நடிகர் சைஜு குருப் கதாநாயகனாக நடிக்கும் ‘ஹரிவராசனம்’ படத்தில், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
இந்த தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சைஜு குருப், “’ஹரிவராசனம்’ – இந்த தெய்வீகமான கதை மேலும் வலுப்பெறுகிறது. யோகி பாபுவை எங்கள் குழுவில் வரவேற்பதில் மகிழ்ச்சி. உணர்வுகள், பக்தி மற்றும் வலிமையான கதை சொல்லல் ஆகியவற்றின் கலவையாக உருவாகும் இந்தப் படத்துக்குத் தயாராகுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
ராஜேஷ் நாயர் இயக்கும் இந்தப் படத்தை அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் பின்னணியில் உருவாகும் பக்தி மற்றும் உணர்வுபூர்வமான கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இதற்காக திருவனந்தபுரம் சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் சபரிமலை கோயிலைப் பிரதிபலிக்கும் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. யோகிபாபுவுக்கு இது 2-வது மலையாளப் படமாகும்.