அனில் ரவிப்புடியின் அடுத்த படம், மலையாள படத்தின் ரீமேக் என்ற தகவலுக்கு கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘குருவாயூரம்பள நடயில்’. இப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் அனில் ரவிப்புடியின் அடுத்த படம் என்று தகவல்கள் பரவின. இது குறித்து இப்படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், அது உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெளியான கடைசி 2 படங்களுமே, ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது. இதனால் அவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதில் வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
2027-ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை சைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.