தென்னிந்திய சினிமா

ஜார்​ஜி​யா​வில் ‘வாரணாசி’ படப்பிடிப்பு

ப்ரியா

‘ஆர்​ஆர்​ஆர்’ வெற்​றிக்​குப் பிறகு ராஜமவுலி இயக்கி வரும் திரைப்​படம், ‘வாரணாசி’. இதில் மகேஷ்​பாபு நாயக​னாக நடிக்​கிறார். பிரி​யங்கா சோப்ரா நாயகி​யாக​வும் பிருத்​வி​ராஜ் வில்​ல​னாக​வும் நடிக்​கின்​றனர். பிர​காஷ் ராஜ், மாதவன் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.

‘ஆர்​ஆர்​ஆர் ’ படத்​தின் பாடலுக்கு ஆஸ்​கர் விருது கிடைத்​ததை அடுத்து ‘வாரணாசி’படத்​துக்​குச் சர்​வ​தேச அளவில் எதிர்​பார்ப்பு உள்​ளது. ஆக் ஷன் அட்​வெஞ்​சர் பேன்​டஸி படமான இதன் கதையை ராஜமவுலி​யின் தந்​தை, விஜயேந்​திர பிர​சாத் எழு​தி​யுள்​ளார்.

          

இப்​படம், 2027-ம் ஆண்டு ஏப்​.7-ல் வெளி​யாகிறது. இதன் முக்​கிய​மான காட்​சிகள் கென்யா காடு​களில் படமாக்​கப்​பட்​டுள்​ளன. இப்​போது இதன் படப்​பிடிப்பு ஜார்​ஜியா வில் நடை​பெறுகிறது. இதற்​காக மகேஷ்​பாபு அங்கு சென்​றுள்​ளார். பிருத்​வி​ராஜ், பிரி​யங்கா சோப்​ரா​வும் அங்கு செல்​கின்​றனர்.

படத்​தின் மொத்த படப்​பிடிப்​பும் ஜூன் மாதம் முடிவடை​யும் என்​றும் செப்​டம்​பர் மாதம் இதன் பின்​னணி இசையைத் தொடங்க இருப்​ப​தாக​வும் இசை அமைப்​பாளர் மரகதமணி தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT