தென்னிந்திய சினிமா

டைரக்டர் ஆனார் ‘வலிமை’ கார்த்திகேயா

செய்திப்பிரிவு

அஜித்​ கு​மாரின் ‘வலிமை’ படத்​தில் வில்​ல​னாக நடித்​தவர், தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா. இவர் தெலுங்​கில் ஆர்​எக்ஸ் 100, ஹிப்பி உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். கடந்த 2 ஆண்​டு​களாக புதிய படங்​களில் நடிக்​காமல் இருந்த அவர் தற்​போது ‘கம்​பேக்’ என்ற படத்​தில் ஹீரோ​வாக நடிக்​கிறார்.

இதை தனது சொந்த தயாரிப்பு நிறு​வன​மான கார்த்திகேயா கிரியேட்​டிவ் ஒர்க்ஸ் சார்​பில் தயாரிக்​கும் அவர், இயக்​குந​ராக​வும் அறி​முக​மாகிறார். இந்​தப் படம் அடுத்த ஆண்டு வெளி​யாக இருக்கிறது. இதில் அவர் பாக்​ஸ​ராக நடிக்​கிறார். படம் பற்​றிய மற்ற விவரங்​கள் விரை​வில் வெளி​யாகும் என படக்​குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT