தென்னிந்திய சினிமா

‘டாக்சிக்’ ட்ரெய்லர் எப்படி? – நிழல் உலகத்துடன் போராடும் யஷ்!

ப்ரியா

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்திருக்கும் ’டாக்சிக்: ஃபரி டேல் ஃபார் க்ரோன் அப்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கைரா அத்வானி, தாரா சுதரியா, நயன்தாரா,  ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.    

ட்ரெய்லர் ஒரு மோசமான தந்தை மகன் உறவாக யஷ்ஷுக்கும் அவரது மகனுக்கு இடையில் தொடங்குகிறது. 4.39 நிமிடங்கள் ஓடும் ட்ரெய்லர் முழுக்க  வன்முறையும் ரத்தமும் தெறிக்கின்றன.

1980-களின் கோவாவில் உள்ள போதைபொருள் கடத்தல் கும்பல் பின்னணியில் படம் உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. படத்தில் தந்தை மகன் என இரண்டு வேடத்தில் யஷ் நடித்துள்ளார்.

படத்தின் க்ளிம்ப்ஸ், டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது ட்ரெய்லரும் கவனம் பெற்றுள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்துக்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை பணியினை ரவி பஸ்ரூர், படத்தொகுப்பினை உஜ்வால் குல்கர்னி மேற்கொண்டுள்ளனர். சண்டை காட்சிகளை ஹாலிவுட்டின் ஜேஜே பெர்ரி, இந்தியாவின் அன்பரிவ் மற்றும் கெச்சா கம்பக்டீ ஆகியோருடன் உருவாக்கி உள்ளனர்.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. 

SCROLL FOR NEXT