தென்னிந்திய சினிமா

“பொறுமை​யைக் கற்​றுக் கொடுத்த காயம்” - ரகுல் ப்ரீத் சிங் உருக்​கம்

நிலா

தமிழில் ‘தடையறத் தாக்​க’, ‘என்​னமோ ஏதோ’, ‘ஸ்​பைடர்’, ‘தீரன் அதி​காரம் ஒன்​று’, ‘இந்​தி​யன் 2’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். இந்​தி, தெலுங்கு படங்​களில் நடித்து வரும் அவர், உடற்​ப​யிற்​சிக்கு முக்கியத்​து​வம் கொடுப்பவர்.

கடந்த 2024-ம் ஆண்டு இறு​தியில் ஜிம்​மில் 80 கிலோ எடையைத் தூக்​கும் போது முதுகில் பலத்த காயம் அடைந்தார். இதற்​காக சிகிச்​சைப் பெற்று வந்​தார்.

இந்​நிலை​யில், 18 மாதங்​களுக்​குப் பிறகு உடற்​ப​யிற்​சி​யை மீண்டும் தொடங்​கி​யுள்​ள​தாகக் கூறி​யுள்​ளார். இது குறித்து அவர் கூறும்​போது, “ஒவ்​வொரு பயணத்​தி​லும் யாரும் எதிர்​பார்க்​காத ஓர் அத்​தி​யா​யம் இருக்​கும். எனக்கு அது காயத்​தின் வடி​வில் வந்தது. ஒவ்​வொரு நாளும் இன்னும் வலிமையாக மாற வேண்​டும் என்ற இலக்​குடன் இருந்த போது, அந்​தக் காயம் என் பயணத்​தைத் திடீரென நிறுத்​தி​விட்​டது.

அது எனக்கு பல பாடங்​களைக் கற்​றுக் கொடுத்​தது. குறிப்பாகப் பொறுமை​யைக் கற்​றுக் கொடுத்​தது. முன்பு புதிய உடற்​ப​யிற்சி இலக்​கு​களை அடைய வேண்​டும் என்​ப​தில்​தான் என் கவனம் இருந்​தது. ஆனால், இந்​தக் காயத்துக்​குப் பிறகு நல்ல உடல்​நிலையை மீண்​டும் பெறு​வது​தான் முக்​கி​யம் என்​பதை உணர்ந்தேன்.

ஜிம்​முக்​குள் மீண்​டும் நுழைந்​தது, நீண்ட நாட்​களுக்​குப் பிறகு வீட்டுக்​குத் திரும்​பியதைப் போல உணர வைத்​தது. நான் பழைய மனித​ராகத் திரும்ப வரவில்​லை; மனவலிமை, நன்றியுணர்வு மற்றும் புதிய பார்​வை​யுடன் புதிய அத்​தி​யா​யத்​தைத் தொடங்க வந்​திருக்​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT