ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் மீண்டும் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது.
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் ‘தி கேர்ள் பிரெண்ட்’. இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது மீண்டும் இக்கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.
தனது அடுத்த படத்துக்கான கதையினை ராஷ்மிகா மந்தனாவை சந்தித்துக் கூறியிருக்கிறார் ராகுல் ரவீந்திரன். அவருக்கும் கதை மிகவும் பிடித்திருக்கவே, இருவரும் இப்படத்துக்கான தயாரிப்பாளரை தேடி வருகிறார்கள். இதனை பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார் ராகுல் ரவீந்திரன்.
‘தி கேர்ள் பிரெண்ட்’ படத்தில் ராஷ்மிகாவின் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். முழுக்க பெண்களின் மனநிலையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தினை பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டியிருந்தார்கள்.