தென்னிந்திய சினிமா

நாகர்ஜுனாவின் ‘கிங் 100’ படத்தில் தபு கதாபாத்திரம் அறிமுகம்

ப்ரியா

நாகர்ஜுனாவின் நூறாவது படமான ‘கிங் 100’ படத்தில் தபுவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு இன்று (நவ.4) வெளியிட்டுள்ளது.

தபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிமுக வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் தபு, மஹாந்தி ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த அறிமுக வீடியோ க்ளிம்ஸை நாகர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் பிரிய தபு. ‘நின்னே பெல்லாதடா’ படத்தின் பாண்டுவை இந்த உலகம் எளிதில் மறந்திருக்காது. இனி நீங்கள் எங்கள் நினைவுகளில் மஹாந்தி ஜான்சி ராணியாக நிலைத்திருப்பீர்கள்.

நீங்கள் இந்தப் படத்தை மிகவும் சிறப்பானதாக ஆக்கியுள்ளீர்கள். உங்களையும், இந்த புதிய நெருப்பு பொறியையும் கொண்டாடும் விதமாக இந்த க்ளிம்ஸை வெளியிடுகிறேன். இந்த முறை இது காதல் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் தபு ஆளுமை மிக்க அரசியல்வாதியாக நடித்துள்ளார். முன்னதாக நாகர்ஜுனாவும் தபுவும் ‘நின்னே பெல்லாதடா’, ‘அவிடா மா அவிடே’ ஆகிய படங்களில் நடித்துள்ளனர். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து நடித்துள்ளது.

நாகார்ஜுனாவின் அன்​னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்கும் ‘கிங் 100’ படத்தை ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கிய ரா.கார்த்திக் இயக்குகிறார்.   

இந்தப் படத்தில் தபுவுடன் சுஷ்மிதா பட், விஜயேந்​திரா முக்​கிய வேடங்​களில் நடிக்​கின்​றனர். தேவி ஸ்ரீபிர​சாத் இசை அமைக்கிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT