தென்னிந்திய சினிமா

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு ஜாமீன் மறுப்பு

நிலா

பாலியல் துன்புறுத்தல் வழக்​கில் கைது செய்​யப்​பட்ட மலை​யாள இயக்​குநர் ரஞ்​சித்​தின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதி​மன்​றம், அவரை திங்​கட்​கிழமை வரை போலீஸ் காவலில் விசா​ரிக்க அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

பிரபல மலை​யாள இயக்​குநர் ரஞ்​சித் மீது, இளம் நடிகை ஒரு​வர் பாலியல் புகார் கொடுத்​துள்​ளார். அதில், கடந்த ஜன.19-ம் தேதி படப்​பிடிப்பு தளத்​தில் கேர​வனில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறிய புகாரை அடுத்​து, கடந்த செவ்​வாய்க்​கிழமை இரவு ரஞ்​சித் கைது செய்​யப்​பட்​டு, எர்​ணாகுளம் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

          

அந்த இளம் நடிகை கேர​வனில் இருந்து அழுது​கொண்டே வெளியே வந்​ததை, படப்​பிடிப்​புத் தளத்​தில் இருந்​தவர்​கள் பார்த்​த​தாகக் கொச்சி காவல் ஆணை​யர் கலி​ராஜ் மகேஷ் குமார் ஏற்​கெனவே தெரி​வித்​திருந்​தார்.

இதற்​கிடையே எர்​ணாகுளம் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட இயக்​குநர் ரஞ்​சித்​தை, போலீஸ் காவலில் விசா​ரிக்க அனு​மதி கோரப்​பட்​டது. கைது செய்​யப்​பட்ட போது ரஞ்​சித்​துக்கு உடல்​நலக் குறைவு ஏற்​பட்​ட​தால், அவரிடம் முழு​மை​யாக விசா​ரணை நடத்த முடிய​வில்லை என்​றும், கூடு​தல் ஆதா​ரங்​களைச் சேகரிக்க வேண்​டி​யுள்​ள​தால் போலீஸ் காவல் அவசி​யம் என்​றும் அரசு தரப்​பில் வாதிடப்​பட்​டது. அதை ஏற்ற நீதி​மன்​றம் திங்​கட்​கிழமை வரை போலீஸ் காவலில் விசா​ரிக்க அனு​மதி வழங்​கியது. அவருடைய ஜாமீனை நிராகரித்த நீதி​மன்​றம், அம்​மனு மீதான விசாரணையை வரும்​ 7-ம்​ தேதிக்​கு ஒத்​திவைத்​தது.

SCROLL FOR NEXT