நடிகை நித்யா மேனன்

 
தென்னிந்திய சினிமா

“நடிகைகள் சில எல்​லைகளை வகுத்துக் கொள்ள வேண்​டும்” - நித்யா மேனன் அறி​வுரை

நிலா

ராம் சரண், ஜான்வி கபூர் நடித்​துள்ள ‘பெத்​தி’ படம் கடந்த 4ம் தேதி வெளி​யானது. அதில் ஜான்வி கபூரின் கதா​பாத்​திரம் மிக​வும் கவர்ச்​சி​யாகச் சித்​தரிக்​கப்​பட்​டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்​தது. அதற்கு இப்​படத்​தின் இயக்​குநர் புச்சி பாபு பகிரங்​க​மாக மன்னிப்பு கேட்​டார். இந்​நிலை​யில் ஜான்வி கபூருக்கு ஆதர​வாக திரை​யுல​கினர் கருத்து தெரி​வித்து வரு​கின்​றனர்.

நடிகை நித்யா மேனன் கூறும்​போது, “திரைப் ​படங்​களில் பெண்களை கவர்ச்​சிப் பொருளாகக் காட்​டு​வது என்​பது தென்னிந்திய சினி​மாவுக்கு மட்​டுமே உரியப் பிரச்​சினை அல்ல; இது ஒட்​டுமொத்த திரையுல​கிலும் இருக்​கும் பொது​வான போக்குதான். வணிக ரீதி​யான வெற்​றிக்​காக​வும், ரசிகர்​களைக் கவர்​வதற்​காக​வும் மட்​டுமே இத்​தகைய காட்​சிகள் வைக்​கப் படுகின்​றன.

இது எல்லை மீறிப் போகிறதா என்று கேட்​டால், ‘நிச்​சய​மாக ஆமாம்’ என்​று​ தான் சொல்​வேன். இதற்​காக, நடிகைகள் தங்களுக்கென்று சில எல்​லைகளை வகுத்​துக் கொள்ள வேண்​டும். ஒரு காட்சி​யில் நடிக்​கும் போதே, தனக்கு அதில் உடன்​பாடு இல்லை என்றும், தன்னை கவர்ச்​சிப் பொருளாகக் காட்​டு​வதை விரும்பவில்லை என்​றும் திட்​ட​வட்​ட​மாகக் கூற வேண்​டும்.

நாம் நம் உரிமையை நிலை​நாட்ட முடி​யும். அது அவர​வர் முன்னுரிமை​யைப் பொறுத்​தது. புகழ் மட்​டுமே முக்​கி​யம் என்று நினைப்​பவர்​கள் எதற்​கும் துணி​கிறார்​கள். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே நடிகைகள் தங்​களின் எல்​லைகளைத் தெளி​வாகத் தெரிவிப்​பது முக்​கியம்” என்று தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT