கன்னட நடிகையான ருக்மிணி வசந்த், தமிழில் விஜய் சேதுதியின் ஏஸ், சிவகார்த்திகேயனின் மதராஸி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் மூலம் பிரபலமான இவர் ‘டாக்ஸிக்’ படத்திலும் நடித்திருந்தார். ஜுனியர் என்.டி.ஆருடன் ‘டிராகன்’ படத்தில் நடித்து வரும் அவர், ‘கணம்’ இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் ஆகியோர்முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ருக்மிணி வசந்த் ஏற்று நடிக்கும் ‘தாரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் பிரத்யேக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.