‘காந்தாரா’ படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. தற்போது ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் நடித்து வருகிறார். இவர், ‘காந்தாரா’ படங்களைத் தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் ‘அன்ஃபாலோ’ செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்நிறுவனத்துக்கும் ரிஷப் ஷெட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் ‘அன்ஃபாலோ’ செய்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் இயக்கிய ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் நாயகியான ருக்மிணி வசந்த்தையும் தனது நண்பரும் நடிகருமான ராஜ் பி ஷெட்டியையும் அவர் ‘அன்ஃபாலோ’ செய்துள்ளார். இது கன்னட சினிமாவிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.