பிரபல ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி
கேரள மாநில திரைப்பட அகாடமியின் தலைவர் பதவியிலிருந்து ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஒலி வடிவமைப்பாளர், ரசூல் பூக்குட்டி விலகியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ரசூல் பூக்குட்டி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் பிரேம் குமார் ஆகியோருக்குப் பிறகு இவர் இப்பொறுப்பை ஏற்றிருந்தார். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசின் தலைமைச் செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
ரசூல் பூக்குட்டியின் பதவி விலகலைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் தொடங்கியுள்ளன. இதில் மூத்த நடிகர் ஜகதீஷ், நடிகர் சலீம்குமார், இயக்குநர் தீபு கருணாகரன், பிரேம் குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.