நானி நடித்துள்ள ‘த பாரடைஸ்’ படத்தை ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியுள்ளார்.
இதில் கயாடு லோஹர், ராகவ் ஜுயல், மோகன் பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்எல்வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் மார்ச் 26-ல் வெளியாக இருந்தது. அதே தேதியில் ‘துரந்தர் 2’ படம் வெளியானதால் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்துக்கு ரீ ஷூட் நடைபெற்று வருவதாகவும் இதனால் ரிலீஸ் தள்ளிப் போகிறது என்றும் செய்திகள் வெளியானது. இதைப் படக்குழு மறுத்துள்ளது.
“100 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. எஞ்சிய படப்பிடிப்பும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இப்படம் தொடர்பாக எங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகும் செய்திகளை மட்டுமே நம்புங்கள்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.