தென்னிந்திய சினிமா

“சம்பளமின்றி நடித்த ரவிதேஜா” - தயாரிப்பாளர் பகிர்வு

ஸ்டார்க்கர்

சமீபத்திய ரவிதேஜா படங்கள் பெரும் தோல்வியை தழுவி வருகின்றன. இதனிடையே அவருடைய அடுத்த படமான ‘Bhartha Mahasayulaku Wignyapthi’ பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் பேசும் போது, “இப்படம் பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் ரவிதேஜா நடிக்க ஒப்புக் கொண்டார். மேலும், இதில் நடிப்பதற்காக இதுவரை ரவிதேஜா சம்பளம் எதுவுமே பெறவில்லை. இப்படம் நன்றாக ஓடி வசூல் செய்தால் மட்டுமே சம்பளம் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளரின் இப்பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரவிதேஜாவின் இந்த முடிவு திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் ஜனவரி 11-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இறுதி வெளியீட்டு தேதியினை இன்னும் படக்குழு முடிவு செய்யவில்லை.

SCROLL FOR NEXT