நடிகை ராஷ்மிகா, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர், ‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். இந்த ஜோடி பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இருவரும் இதுபற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும் அதுபற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்கள் திருமணம் பிப்.26-ம் தேதி உதய்பூரில் நடக்கிறது.
இதிலும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொள்கின்றனர். திருமண வரவேற்பு மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கிறது. இதில் திரையுலகினர் கலந்துகொள்கின்றனர். இவர்களின் திருமண பத்திரிகை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கிடையே திருமணத்துக்கு முன் இருவரும் இணைந்து விளம்பர படம் ஒன்றில் நடிக்கின்றனர். அதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
அது என்ன விளம்பரம் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். இதற்கிடையே இருவரும் இணைந்து ‘ரணபாலி' என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கின்றனர். இதை ராகுல் சாங்கிருதயன் இயக்குகிறார். இதுபற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.