நடிகர் மகேஷ் ​பாபு

 
தென்னிந்திய சினிமா

ராஜமவுலி​யின் ‘வாரணாசி’யில் ராமர் - கும்பகர்​ணன் போர் காட்சி

நிலா

ராஜமவுலி இயக்​கும் ‘வாரணாசி’ திரைப்​படத்​தில் ராமருக்​கும் கும்பகர்​ணனுக்​கும் இடையி​லான 30 நிமிட போர்க்​காட்சி இடம்​பெற இருப்​ப​தாக விஜயேந்​திர பிர​சாத் தெரி​வித்​துள்​ளார்.

ராஜமவுலி இயக்​கத்​தில் பிரம்​மாண்​ட​மாக உரு​வாகி வரும் திரைப்படம் ‘வாரணாசி’. ஆக் ஷன் அட்​வெஞ்​சர் ஃபேன்​டஸி படமான இதன் கதையை ராஜமவுலி​யின் தந்​தை, விஜயேந்​திர பிரசாத் எழுதி​யுள்​ளார். இதில் மகேஷ்​பாபு ‘ருத்​ரா’ என்ற கதா​பாத்திரத்​தில் நடிக்​கிறார்.

அவருடைய கதா​பாத்​திரம் ராமருடன் தொடர்​புடையதாக இருக்கும் என்று கூறப்​படு​கிறது. பிரி​யங்கா சோப்ரா ‘மந்​தாகினி’ என்ற பாத்​திரத்​தி​லும், பிருத்​வி ​ராஜ் சுகு​மாரன் ‘கும்​பன்’ (கும்பகர்ணன்) என்ற வில்​லன் கதா​பாத்​திரத்​தி​லும் நடிக்கின்றனர். இப்​படம், 2027ம் ஆண்டு ஏப்​.7ல் வெளி​யாகிறது. முக்​கிய​மான காட்​சிகள் கென்ய காடு​களில் படமாக்கப்பட்டுள்ளன. அண்​டார்​டிகா உள்பட பல நாடு​களில் இதன் படப்​பிடிப்பு நடை​பெற இருக்​கிறது.

இந்​நிலை​யில் இப்​படத்​தில் ராமருக்​கும் கும்​பகர்​ணனுக்​கும் இடையி​லான 30 நிமிட போர்க் காட்சி பிரம்​மாண்​ட​மாக இடம் பெற இருப்​ப​தாகக் கதாசிரியர் விஜயேந்​திர பிர​சாத் தெரிவித்துள்ளார். ராஜமவுலி, தனது சாகசக் கதை​யில் புராணப் பின்​னணியை தனித்​து​வ​மான முறை​யில் கலந்​திருக்​கிறார் என்கிறார்​கள்.

SCROLL FOR NEXT