தென்னிந்திய சினிமா

ஒரே ஒரு வாக்கியத்தில் சொன்ன கதை! - ராஜமவுலி பகிர்ந்த தகவல்

நிலா

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்​கி​யுள்​ளார். இதில் ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்துள்ளார். ஷோயிங் பிசினஸ் நிறு​வனம் சார்​பில் எஸ்​.எஸ்​.​கார்த்​தி​கே​யா, ‘பாகுபலி’ படத்​தைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து தயாரித்​துள்​ளார். எஸ்​.எஸ்​.​ராஜமவுலி வழங்​கும் இப்​படம் அக்​.2-ல் வெளி​யாகிறது. இதன் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் விநி​யோகஸ்​தர்

சக்​திவேலன், நடிகர் சூர்​யா, தயாரிப்​பாளர் ஐசரி கே.கணேஷ் கலந்து கொண்​டனர்.

இயக்​குநர் எஸ். எஸ். ராஜமவுலி பேசும்​போது, ‘‘இந்​தப் படத்​தின் இயக்​குநர் ஷஷாங்க் கதை சொல்​வதற்​காக என்னை சந்​தித்​தார். அப்​போது அவர் எனக்கு 3 மணி நேரம் தாருங்​கள்; இப்​படத்​தின் கதையைச் சொல்​கிறேன் என்​றார். 5 நிமிடத்​தில் சொல்ல முடி​யு​மா? எனக் கேட்​டேன். அப்​படிச் சொன்​னால், அது பிடித்​திருந்​தால், முழுக் கதையைக் கேட்​கிறேன் என்​றேன்.‌ அப்போது அவர் யோசித்து எனக்கு 5 நிமிடம் வேண்​டாம்; ஒரே ஒரு வாக்​கி​யத்​தில் சொல்கிறேன் என்​றார்.

‘ஒரு பேயைக் கடத்​திய மனிதனின் கதை...’ என்று அவர் சொன்​னதும் மிக​வும் பிடித்து விட்​டது. இந்த ஒற்றை வாக்​கி​யத்​தில், இதில் இருக்​கும் எல்லா விஷ​யங்​களும் என் மனதில் ஓடியது. அதனால் இந்​தக் கதை மிக​வும் அரு​மை​யாக இருந்​தது. அதன் பிறகு இந்த படத்​தின் பணி​கள் தொடங்​கின. ஃபஹத் பாசில் சிறந்த நடிகர். ஒவ்​வொரு படத்​தி​லும் வித்​தி​யாச​மான கதா​பாத்​திரங்​களில் நடித்​திருக்​கிறார். அவர் எப்​படி, இப்​படிப்​பட்ட கதா​பாத்​திரங்​களைத் தேர்வு செய்து நடிக்​கிறார் என்​பது ஆச்​சரிய​மாகவே இருக்​கிறது. இந்​தப் படத்​தின் ராஸ்​கல் அவர்​தான்.

சூரி என்ற கதா​பாத்​திரத்​தில் அற்​புத​மாக நடித்​திருக்​கிறார். இந்​தப் படத்​தின் முதல் பிர​தியை டப்​பிங் இல்​லாமல், இசை இல்​லாமல் பார்க்​கும் போது அழுதேன். சிரித்​தேன். அந்த அளவுக்கு என்னை இந்​தப் படம் கவர்ந்​தது. அந்த சூரி கதா​பாத்​திரத்​துக்கு உயிர் கொடுத்து நடித்​திருக்​கிறார் ஃபஹத் பாசில். சூரி கதா​பாத்​திரத்தை ஓட ஓட விரட்​டு​வது திவ்​யா. அந்த கதா​பாத்​திரத்​தில் சாரா அற்​புத​மாக நடித்​திருக்​கிறார்” என்​றார்.

SCROLL FOR NEXT