நிதி முறைகேடு புகார்: மும்பையில் நடிகை ரகுல் பிரீத் சிங் வீடு அலுவலகங்களில் வருமான வரி துறை சோதனை

நிதி முறைகேடு புகார்: மும்பையில் நடிகை ரகுல் பிரீத் சிங் வீடு அலுவலகங்களில் வருமான வரி துறை சோதனை
Updated on: 
1 min read

மும்பை: நிதிமுறை​கேடு புகாரில் தமிழ் நடிகை ரகுல் பிரீத் சிங், அவரது மாம​னாரும் திரைப்​படத் தயாரிப்​பாள​ரு​மான வாசு பக்​னானி மற்​றும் ‘பனோரமா ஸ்டுடியோஸ்’ ஆகிய​வற்​றுடன் தொடர்​புடைய, மும்​பை​யிலுள்ள 12 இடங்​களில் வரு​மான வரித்​துறை​யினர் நேற்று சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

திரைப்​படத் தயாரிப்​புக்கு நிதி அளிப்​ப​தாகக் கூறி, வெளி​நாடு​களுக்கு நிதி திசை​ திருப்​பப்​பட்​ட​தாக எழும் புகார்​களின் அடிப்​படை​யில் புல​னாய்வு அதி​காரி​கள் விசா​ரணையை மேற்​கொண்​டுள்​ளனர். மும்பை வரு​மான வரித்​துறையைச் சேர்ந்த பல குழுக்​கள், சந்​தேகத்​துக்​குரிய வெளி​நாட்​டுப் பணப்​பரிவர்த்​தனை​களின் விவரங்​கள், கணக்கு ஆவணங்​கள்,நிதிப் பதிவேடு​களை தீவிர​மாக ஆராய்ந்து வரு​கின்​றன.

கடந்த ஆண்டு டிசம்​பரில் போதைப்​பொருள் கடத்​தி​ய​தாக இரு தொழில​திபர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் இருந்து 43 கிராம் கொக்​கைன் மற்​றும் 11.5 கிராம் எம்​டிஎம்ஏ ஆகிய போதைப்​பொருள்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

அந்த வழக்​கில், நடிகை ரகுல் பிரீத் சிங்​கின் சகோ​தர​ரான அமன் பிரீத் சிங், கைது செய்​யப்​பட்ட அந்த இரு தொழில​திபர்​களிட​மிருந்​தும் ஐந்துமுறை போதைப்​பொருள்​களை வாங்​கிய​தாக மும்பை காவல்துறை் குற்றம்சாட்டியது குறிப்​பிடத்​தக்​கது.

தடையறத் தாக்க, தீரன் அதி​காரம் 1, இந்​தி​யன் 2, என்​ஜிகே உள்​ளிட்ட பிரபல தமிழ்த் திரைப்​படங்​களில் ரகுல் பிரீத் சிங் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளார்​.மேலும், தீபாவளிக்கு வெளி​யாக உள்ள ராமாயணா படத்​தில் சூர்ப்​பனகை​யாக​வும், இந்​தி​யன் 3 படத்​தி​லும் ரகுல் பிரீத் நடித்​துள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

நிதி முறைகேடு புகார்: மும்பையில் நடிகை ரகுல் பிரீத் சிங் வீடு அலுவலகங்களில் வருமான வரி துறை சோதனை
எல் நினோ தாக்கம் எதிரொலி: இந்திய அணைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் சரிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in