நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இதில் கமல்ஹாசன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகை தீபிகா படுகோன் இப்படத்தில் நடிக்க சில நிபந்தனைகளை விதித்தார். 8 மணி நேர ஷூட்டிங், தனது உதவியாளர்களுக்கு சில சலுகைகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குத் தயாரிப்பாளர் மறுத்ததால் அவர் படத்திலிருந்து விலகினார்.
அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டி, ஆலியா பட் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா அதில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்திலும் பிரியங்கா நடித்து வருகிறார்.