தென்னிந்திய சினிமா

'வாரணாசி'க்காக கென்யா காட்டில் காட்டெருமை​கள் நடுவே படப்பிடிப்பு: பிரியங்கா சோப்ரா தகவல்

செய்திப்பிரிவு

மகேஷ்​பாபு கதா​நாயக​னாக நடிக்​கும் ‘வாரணாசி’ படத்தை இயக்கி வரு​கிறார், ராஜமவுலி. இதில் பிரியங்கா சோப்ரா நாயகி​யாக​வும் பிருத்​வி​ராஜ் வில்​ல​னாக​வும் நடிக்கின்றனர். 2027-ம் ஆண்டு ஏப்​.7-ல் வெளி​யாக இருக்கும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு சில மாதங்​களுக்கு முன் கென்​யா​வில் நடை​பெற்​றது.

இந்​நிலை​யில் அங்கு நடந்த படப்​பிடிப்பு அனுபவங்களை நடிகை பிரி​யங்கா சோப்ரா பகிர்ந்​துள்​ளார். இதுபற்றி அவர் அளித்​துள்ள பேட்டி யில், “‘வாரணாசி’ படத்​துக்​காகக் கென்​யா​வில் படப்​பிடிப்​பில் இருந்​தேன். அங்கு நாங்​கள் காட்​டெரு​மை​களுக்கு நடு​வில் நின்று படப்​பிடிப்பு நடத்​தினோம்.

          

அவை ஓர் இடத்​திலிருந்து மற்​றொரு இடத்​துக்கு வலசை போகும் நேரத்​தில், அவற்​றின் கூட்​டத்​துக்கு நடு​விலேயே நானும் சக நடிகர் மகேஷ் பாபு​வும் நின்​றிருந்​தோம். நான் பார்த்​த​திலேயே மிக​வும் சிறந்த விஷ​யம் அது​தான். அவற்​றின் முகங்​களைப் பார்க்​கும்​போதும், எத்​தனை ஆண்​டு​களாக அவற்​றின் இனங்​கள் இங்கே வாழ்ந்து வரு​கின்றன என்​பதை நினைக்​கும்​போதும் ஒரு வித​மான பிரம்​மாண்​டத்தை உணர முடிந்​தது.

காட்​டில் இந்த விலங்​கு​களை நேரில் பார்க்​கும்​போது அந்த இடத்​தின் ஆழமான கனத்தை உணர முடி​யும். இது உண்​மை​யிலேயே ஓர் இனிமை​யான அனுபவம்” என்று அவர் கூறி​னார். இந்தப் படப்​பிடிப்பு பற்றி மகேஷ் பாபு ஏற்​கெனவே கூறி​யிருந்​தார்.

அவர் கூறும்​போது, “இந்த அனுப வத்தை என்​னால் ஒரு​போதும் மறக்கமுடி​யாது. விலங்​குகளுக்கு நடுவே இருப்பது முதலில் கொஞ்​சம் பயமாகத்​தான் இருந்​தது, ஆனால் 5 அல்​லது 10 நிமிடங்​களுக்​குப் பிறகு அங்கே கேம​ராக்​கள் இருப்​பதோ அல்​லது வேறு யாராவது இருப்​பதோ கண்​ணுக்​குத் தெரிய​வில்​லை. அந்​தப் பெருங்​காட்​டின் நடுவே நாங்​கள் மட்​டும் இருப்​பது போன்ற உணர்வு ஏற்பட்டது” என்று தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT