தென்னிந்திய சினிமா

பான் இந்தியா ரியாலிட்டி ஷோ ‘பிக் பிட்ச்சர்’

நிலா

ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்​தில் ‘பிக் பிட்ச்சர்’ என்ற பான் இந்​தியா ரியாலிட்டி ஷோ ஒளிபரப்​பாக இருக்​கிறது.

சமூக வலைதள திரைப்பட விமர்​சகர்​கள் அதி​கரித்​து​வரும் இக்​கால​கட்​டத்​தில் ‘இவ்​வளவு காலம் படங்​களை விமர்​சனம் செய்​தீர்​கள், இப்​போது ஒரு படத்தை உருவாக்கிப் பாருங்​கள்’ என்ற சவாலை இந்த நிகழ்ச்சி முன்​வைக்​கிறது. கேமென் ஸ்போர்ட்ஸ் அண்ட் என்​டர்​டெ​யின்​மென்ட்​ த​யாரித்​துள்ள இந்​நிகழ்ச்சி 15 வாரங்​கள் ஒளிபரப்​பாகும்.

இதில் பார்​வை​யாளர்​களே எழுத்​தாளர்​கள், இயக்​குநர்​கள், நடிகர்​களாக மாறு​வார்​கள். பார்​வை​யாளர்​களின் கருத்து மற்​றும் திரைப்பட உரு​வாக்​கத்​தின் கடின​மான உண்மை ஆகிய​வற்​றுக்கு இடையி​லான இடைவெளியை நிரப்​புவதே இந்​நிகழ்ச்சியின் நோக்​கம். இறுதி எபிசோடில் வெற்​றி​யாளர்​கள் அறிவிக்​கப்​பட்ட பின், அவர்​கள் இணைந்து பான்​-இந்​தியா திரைப்​படத்தை உரு​வாக்​கு​வார்​கள். அப்​படம் திரையரங்​கு​களில் வெளி​யிடப்​படும்.

இந்​நிகழ்ச்​சி​யைத் தமிழில் பரத், மலை​யாளத்​தில் இந்​திரஜித் சுகு​மாரன், தெலுங்​கில் நவ்​தீப், கன்​னடத்​தில் வசிஷ்டா என். சிம்​ஹா, இந்​தி​யில் விஜய் ராஸ் ஆகியோர் தொகுத்து வழங்​கு​கின்​றனர். ஆர்​வ​முள்ள எழுத்​தாளர்​கள்​, நடிகர்​கள், தொழில்​நுட்​பக் கலைஞர்​கள் விண்​ணப்​பங்​களை http://www.bigpitchure.in மூலம் சமர்ப்​பிக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT