தென்னிந்திய சினிமா

நானியின் அடுத்த படம் அறிவிப்பு

ஸ்டார்க்கர்

நானி நடிக்கவுள்ள அடுத்த படத்துக்கு ‘ப்ளடி ரோமியோ’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கி வரும் ‘தி பாரடைஸ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தில் இருந்து ’Aayasher’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் நானியின் நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

          

நானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய அடுத்த படமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ‘ஓஜி’ இயக்குநர் சுஜித் இயக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘ப்ளடி ரோமியோ’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அறிமுக வீடியோவும் வெளியிடப்பட்டது. இதன் காட்சியமைப்புகள், பின்னணி இசை உள்ளிட்டவை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதில் நானியுடன் நடிக்கவுள்ளவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளன. இதில் சமையல் கலை நிபுணராக நடிக்கவுள்ளார் நானி.

SCROLL FOR NEXT