தென்னிந்திய சினிமா

பெயர், குரல், புகைப்​படங்​களை அனு​மதியின்றி பயன்​படுத்தக் கூடாது: நடிகர் அல்லு அர்​ஜுன் வழக்கு

நிலா

அனு​ம​தி​யின்றி தனது பெயர், புகைப்​படங்​கள், காணொளி​கள், குரல் ஆகிய​வற்றை வர்த்தக நோக்​கங்​களுக்​குப் பயன்​படுத்​தத் தடை விதிக்​கக் கோரி, டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் அல்லு அர்​ஜுன் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

திரை பிரபலங்​களான மோகன்​லால், பவன் கல்​யாண், கஜோல், ஆர். மாதவன், ஜூனியர் என்​.டி.ஆர், சல்​மான் கான், நாகார்​ஜுனா என பலர், இதுபோல வழக்​கு​களைத் தாக்​கல் செய்து இடைக்​கால தடை பெற்​றுள்ள நிலை​யில், இப்​போது நடிகர் அல்லு அர்​ஜுனும் மனு​தாக்​கல் செய்​துள்​ளார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதி​மன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. அல்லு அர்​ஜுன் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சுவாதி சுகு​மார், அல்லு அர்​ஜுனின் உரு​வம் அவரது அனு​ம​தி​யின்​றிப் பயன்​படுத்​தப்​பட்​ட​தாகக் கூறப்​படும் பல நிகழ்​வு​களை நீதி​மன்​றத்​தின் கவனத்​துக்​குக் கொண்​டு​வந்​தார்.

அதில் அவரது உரு​வம் பொறிக்​கப்​பட்ட வணி​கப் பொருட்​கள், ஆட்​சேபனைக்​குரிய மற்​றும் ஆபாச​மான உள்​ளடக்​கங்​கள், அத்​துடன் அவரது அடை​யாளத்​தைப் பயன்​படுத்​தும் செயற்கை நுண்​ணறிவு சார்ந்தவை அடங்​கும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வழக்​கில் விரை​வில் தீர்ப்பு வழங்​கப்​படும் என தெரி​கிறது.

SCROLL FOR NEXT