தென்னிந்திய சினிமா

நாகர்ஜுனாவின் ‘கிங் 100’ க்ளிம்ஸ் வெளியீடு

ப்ரியா

நாகர்ஜுனா அக்கினேனியின் ‘கிங் 100’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 

நாகர்ஜுனா அக்கினேனியின் நூறாவது படத்துக்கு தற்காலிகமா  ‘கிங் 100’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அசோக் செல்வன் நடிப்பில் 2022-ம் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரா.கார்த்திக் இயக்குகிறார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

1.20 நிமிடங்கள் ஓடும் இந்த க்ளிம்ஸ் வீடியோ நாகர்ஜுனாவின் குரலில் தொடங்குகிறது. அவர் மனிதர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை பேசுகிறார். பணம் இருப்பவர்களை சமூகம் கிங் எனக் கொண்டாடும், பணம் இல்லாதவர்களை தோல்வி அடைந்தவர்கள் என பரிகசிக்கும் என்று சொல்கிறார்.

மிகவும் ஸ்டைலான தோற்றத்துடன் இருக்கும் நாகர்ஜுனா ஒரு காட்சியில் குழந்தையை தூக்கியபடி ஏழைமையானத் தோற்றத்திலும் வருகிறார். இவை படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

நாகர்ஜுனாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தபு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். படத்துக்கான ஒளிப்பதிவை ராஜா மகாதேவனும், படத்தொகுப்பை நவின் நூலியும் மேற்கொள்கின்றனர். படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT