நடிகர் நானி

 
தென்னிந்திய சினிமா

நானி உடன் இணையும் பிருத்விராஜ்!

ஸ்டார்க்கர்

நானி நடிக்கவுள்ள புதிய படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி. இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை முடித்துவிட்டு சுஜித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் நானி உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் பிருத்விராஜ். ‘ப்ளடி ரோமியோ’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சுஜித் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஓஜி’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நானி படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. நானி - சுஜித் கூட்டணியில் உருவாகும் படத்துக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் தமன்.

SCROLL FOR NEXT