தென்னிந்திய சினிமா

“சினிமா பேரார்​வத்​துடன் செய்யப்பட வேண்​டிய படைப்பு” - ‘சிங் கீதம்’ விழா​வில் கமல்​ஹாசன் பெருமிதம்

நிலா

பழம்​பெரும் இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கியுள்​ளார். தமிழில், ராஜ​ பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை எக்​ஸ்​ பிரஸ் ஆகிய படங்​களை இயக்​கி​ உள்​ளார்.

94-வது வயதான சிங்​கீதம் சீனி​வாச ராவ், ‘சிங் கீதம்’ என்ற படத்தை இப்​போது இயக்கி முடித்​திருக்​கிறார். இதில் அயான், அகல்யா பாம்​ரூ, ஷாலினி கொண்​டேபுடி உள்பட பலர் நடித்துள்ளனர். அன்​குர் சி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்​துள்​ளார். இதை வைஜயந்தி மூவிஸ் வழங்க, இயக்​குநர் நாக் அஸ்​வின் தயாரித்​துள்​ளார். ஜூன் 11-ல் வெளி​யாகும் இந்​தப் படத்​தின் ‘பிரி ரிலீஸ்’ நிகழ்ச்சி சென்னையில் நடை​பெற்​றது. படக் ​குழு​வினர் கலந்​து​கொண்டனர்.

அதில் கமல்​ஹாசன் பேசும்​போது. “மா​யாபஜார் முதல் தற்​போதைய ‘சிங் கீதம்’ வரை, சிங்​கிதம் சீனி​வாச ராவிடம் எந்த மாற்​ற​மும் இல்​லை. சினிமா அவரிடமே உள்​ளது. இது மிக​வும் அரிதாக நடக்​கும் விஷ​யம். எனக்கு 20 வயதாக இருந்​த​போதே அவருடன் பணி​யாற்​றத் தொடங்​கினேன். அவருடைய படங்​களில் தயாரிப்​பாள​ராக​வும், உதவி இயக்​குந​ராக​வும் பணியாற்றியுள்ளேன். அவருடன் பணி​யாற்ற வேண்​டும் என்​பதே என் நோக்​கம். பல ஆண்​டு​களுக்கு முன்​பு, அவர் என்​னிடம் 2 கதைகளைச் சொன்​னார்.

ஒன்று ‘புஷ்பக விமானம்’ என்ற படமாக வெளி​யானது. இப்​போது 2-வது கதை ‘சிங் கீதம்’ என்ற திரைப்​பட​மாக வெளி​யாகப் போகிறது. எனக்கு 20 வயதாக இருந்​த ​போது அந்​தக் கதையைக் கேட்​டேன். இப்​போது எனக்கு 70 வயதாகிறது. இப்​போது நான் அந்தப் படத்​தைப் பார்க்​கப் போகிறேன். சில யோசனை​கள், சில கதைகள் காலத்​தால் அழி​யாதவை. சிங்​கீதம் சாரின் கதைகளும் அப்​படித் ​தான். அவை காலத்​தால் அழி​யாதவை.

பலர் சிங்​கீதம் சாரின் பெயரை ‘சங்​கீதம்’ என்று உச்சரிக்கிறார்கள். ஆனால் இந்​தப் படத்​தின் மூலம், அந்​தக் குழப்பம் இருக்​காது. இனி எல்​லோரும் அவரை ‘சிங்​கீதம்’ என்றே அழைப்​பார்​கள். சிங்​கிதம் சார் இப்​போதும் ஜென்-ஸியை விட முன்​னணி​யில் இருக்​கிறார். இன்று அவரைக் கொண்​டாடு​வது பெரும் மகிழ்ச்​சி. நான் இப்​போதும் அவருடைய உதவி இயக்குநராக இருக்க விரும்​பு​கிறேன். சினிமா என்​பது பேரார்வத்துடன் செய்​யப்பட வேண்​டிய ஒரு படைப்​பு. அவர்​கள் இந்​தப் படத்தை அத்​தகைய பேரார்​வத்​துடன் பார்வையாளர்களுக்கு கொண்டு வரு​கிறார்​கள்” என்​றார்.

SCROLL FOR NEXT