அடுத்து தான் பணியாற்ற இருக்கும் இயக்குநர்களின் பெயர்களை பட்டியலிட்டு நடிகர் மோகன்லால் தனது புதிய படங்கள் குறித்த தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பகிர்ந்திருக்கும் பதிவில், ‘உற்சாகமூட்டும் கதைகள், பரபரப்பான பயணங்கள், சில சிறந்த படைப்பாளிகள். அடுத்து நான் இந்த இயக்குநர்களுடன் தான் பணியாற்ற இருக்கிறேன்.
விஷ்ணு மோகன், அனூப் சத்யன், பிரியதர்ஷன், திலீஷ் போதன், சத்யன் அந்திகாட், ஜூடே அந்தோணி ஜோசப், ஜீது ஜோசப்’ என 7 இயக்குநர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார்.
மோகன்லாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘த்ரிஷ்யம் 3’. அதற்கு பிறகு அவரது மகள் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் ‘துடக்கம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.