தென்னிந்திய சினிமா

பால்கே விருது பெற்ற மோகன்லாலை கவுரவித்த மம்மூட்டி!

செய்திப்பிரிவு

மம்மூட்டியும் மோகன்லாலும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘பேட்ரியாட்’. இதில் பஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, தர்ஷனா ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கின்றனர்.

மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படம் அரசியல் த்ரில்லர் கதையை கொண்டது. இப்படத்தின் டீஸர், அக்டோபர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்தப் படப்பிடிப்பில் மோகன் லால் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு நடிகர் மம்மூட்டி சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்தினார்.

பின்னர் நடிகர் குஞ்சாக்கோ போபன், இயக்குநர் மகேஷ் நாராயணன் ஆகியோரும் அவருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

நடிகர் மோகன் லாலுக்கு கடந்த செப்.23-ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இவ்விருதை அவருக்கு வழங்கினார்.

SCROLL FOR NEXT