நடிகர் ஜோஜு ஜார்ஜ்

 
தென்னிந்திய சினிமா

“எனக்கு எதி​ராகப் பொய் பிரச்சாரம்” - பிரபல நடிகர் மீது ஜோஜு ஜார்ஜ் புகார்

நிலா

பிரபல மலை​யாள நடிக​ரான ஜோஜு ஜார்​ஜ், ‘ஜகமே தந்​திரம்’, ‘பபூன்’, கமலின் ‘தக் லைஃப்’ உள்​ளிட்ட படங்​களில் நடித்​துள்​ளார். இவர் நடித்து சமீபத்​தில் வெளி​யான ‘வரவு’ படம் சரி​யான வரவேற்பைப் பெற​வில்​லை. இதை ஷாஜி கைலாஷ் இயக்கியிருந்தார்.

இந்​நிலை​யில் ரசிகர்​களு​டன் சமூக வலை​தளத்​தில் உரை​யாடிய ஜோஜு ஜார்​ஜ், “தனக்கு எதி​ராக முன்​னணி நடிகர் ஒரு​வரும் அவர் மனை​வி​யும் எதிர்​மறை​யான பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வருவதாகக் குற்​றம் சாட்​டி​னார். அவர்​களின் பெயர்​களைக் குறிப்பி​டா​மல் பேசிய அவர், “சிலர் பணம் கொடுத்து தங்​களைப் பற்​றிய நல்ல செய்​தி​களை​யும் மற்​றவர்​களைப் பற்றி எதிர்மறையான செய்​தி​களை​யும் பரப்​பு​கிறார்​கள்.

எனக்கு எதி​ராக​வும் இப்​படிப்​பட்ட முயற்​சிகள் நடக்​கின்​றன. ஒரு முன்​னணி நடிகரும் அவரது மனை​வி​யும் இதன் பின்​னணி​யில் உள்​ளனர். மலை​யாள சினி​மா​வில் பணம் கொடுத்​துப் பல பிரபலங்​கள், தங்​களைப் பற்றி பிரச்​சா​ரம் செய்​து​ வரு​கின்​றனர். சமூக ஊடகங்​கள் மற்​றும் சில ஊடக தளங்​கள் மூலம் பொதுமக்களின் கருத்தை மாற்​றும் முயற்​சிகளும் நடைபெறுகின்றன.

உண்​மையை விட உரு​வாக்​கப்​பட்ட பொய் பிம்​பங்​களே தற்​போது அதி​கம் பேசப்​படு​கின்​றன. நான் நடித்​துள்ள ‘வர​வு’ திரைப்​படம் வெளி​யானது முதல், அதற்கு எதி​ராக​வும் திட்​ட​மிடப்​பட்ட எதிர்மறைப் பிரச்​சா​ரங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன” என்​றார். நடிகர் ஜோஜூ ஜார்​ஜின் இந்​தக் கருத்து மலை​யாள சினி​மா​வில் வி​வாதத்தை ஏற்​படுத்​தி இருக்​கிறது.

SCROLL FOR NEXT