திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் விநியோகம் திடீர் ரத்து

Cancel

Cancel

Updated on
1 min read

திருப்பதி: ​திருப்​ப​தி​யில் உள்ள விஷ்ணு நிவாசம், மாதவம் மற்றும் பூதேவி காம்ப்​ளக்ஸ் ஆகிய மையங்​களில் தின​மும் இலவச சர்வ தரிசன (எஸ்​எஸ்​டி) டோக்​கன்​கள் விநி​யோகம் செய்யப்​பட்டு வரு​கின்​றன. இதைப் பெறும் பக்​தர்​கள், அதில் குறிப்​பிடப்​பட்​டுள்ள நேரத்​தில் திரு​மலை​யில் உள்ள வைகுண்​டம் க்யூ காம்ப்​ளக்ஸ் பகு​திக்​குச் சென்று ஏழு​மலை​யானைத் தரிசித்து வரு​கின்​றனர்.

வார இறு​தி​யில் திரு​மலை​யில் பக்​தர்​களின் கூட்​டம் கணிச​மாக அதி​கரிப்​பது வழக்​கம். இதனால் வியாழக் ​கிழமை​களில் பக்தர்களின் கூட்​டத்​தைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில், புதன்​ கிழமை​களில் வழங்​கப்​படும் டோக்​கன் விநி​யோகத்தை திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் கடந்த 3 வாரங்​களாக ரத்து செய்து வரு​கிறது.

ஆனால், இதுகுறித்த முறை​யான முன்​ அறி​விப்பு எது​வும் வெளியிடப்​ப​டாத​தால், வெளி மாநிலங்​களில் இருந்து வரும் பக்தர்​கள், தர்ம தரிசன டோக்​கன்​கள்​கூட கிடைக்​காமல் தவித்து வருகின்றனர். தேவஸ்​தானத்​தின் இந்த நடவடிக்​கைக்கு பக்​தர்​கள் மத்தியில் கடும் எதிர்ப்​பு எழுந்​துள்​ளது.

இதனிடையே, வரும் வெள்​ளிக்​கிழமை தரிசனம் செய்​வதற்​கான சர்வ தரிசன டோக்​கன்​கள், நேற்று மதி​யம் முதல் வழக்​கம்​போல் விநி​யோகம் செய்​யப்​படும் என்று தேவஸ்​தான அதி​காரி​கள் தெரிவித்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>Cancel</p></div>
விமான நிலையம் திறப்பு விழா: பிரதமருக்கு சந்திரபாபு அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in