Srinivas
தென்னிந்திய சினிமா

சூர்யா படத்துக்குப் பின் ‘லக்கி பாஸ்கர் 2’: வெங்கி அட்லுரி திட்டம்

ஸ்டார்க்கர்

சூர்யா படத்தினை முடித்துவிட்டு ‘லக்கி பாஸ்கர் 2’ படத்தினை தொடங்க வெங்கி அட்லுரி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

சூர்யா, ரவீனா டண்டன், ராதிகா சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தினை இயக்கியுள்ளார் வெங்கி அட்லுரி. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தினை முடித்துவிட்டு ‘லக்கி பாஸ்கர் 2’ படத்தினை தொடங்க வெங்கி அட்லுரி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லக்கி பாஸ்கர்’. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் மட்டுமன்றி ஓடிடி வெளியீட்டிலும் கொண்டாடப்பட்டது.

இதனால் சூர்யா படத்தினை முடித்துவிட்டு, ‘லக்கி பாஸ்கர் 2’ படத்தினை தொடங்கவுள்ளார் வெங்கி அட்லுரி. முதல் பாகத்தின் முடிவில் இருந்து அக்கதையினை தொடங்கி, அதில் வரும் பிரச்சினைகளை வைத்து 2-ம் பாகத்தினை உருவாக்கவுள்ளார். இதன் 2-ம் பாகத்தினை உருவாக்கும் எண்ணம் இருப்பதாக வெங்கி அட்லுரி பேட்டியொன்றில் கூறியிருந்தது நினைவுக் கூரத்தக்கது.

SCROLL FOR NEXT